முழுக்கோழி ரோஸ்டின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

முழுக்கோழி ரோஸ்ட்

அசைவம்

அரைத்த சிவப்பு மிளகாய்-வெங்காய மசாலா தடவப்பட்ட முழு இளம் கோழியை ஆழமான பழுப்பு நிறமாக வறுக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
45 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்கறி

பொருட்கள்

  • 1 கோழி
  • 1 இஞ்சி, பூண்டு
  • 2 பட்டை
  • 15 மிளகாய் வற்றல்
  • 4 கிராம்பு
  • 10 வெங்காயம்
  • 1/16 படி நெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு மஞ்சள் தூள்

செய்முறை

  1. இளம் கோழி ஒன்றை சுத்தம் செய்து குடல் நீக்கி முழுதாக எடுத்துக்கொள்ளவும். மிளகாய் வற்றல் 15, இஞ்சி ஒரு சிறு துண்டு, பூண்டு 1, கிராம்பு 4, பட்டை 2, வெங்காயம் 10, இவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மசாலுடன் தேவையான உப்புத்தூள், மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். கோழியின் மேற்புறத்தை முள்கரண்டி அல்லது ஊசியினால் நன்றாக குத்தி விடவும். பின் மசாலாவை உப்புக்கால் வெளிப்பக்கமும் நன்றாக தடவி விட்டு இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். கறி வெந்ததும் எடுத்து வாணலியில் 1/16 படி நெய் அல்லது டால்டாவை ஊற்றி அதில் பொரித்து எடுக்கவும்.