ஒன்டன்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

ஒன்டன்ஸ்

சைவம்

மைதா மாவு சதுரங்களுக்குள் வதக்கிய காய்கறி மசாலா நிரப்பி பர்ஸ் வடிவில் மூடி பொன்னிறமாக பொரிக்கப்படும் ஒன்டன்.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கலப்பு உணவு

பொருட்கள்

  • 1 கப் மைதா (குவித்து)
  • 1/4 கப் மக்காச்சோள மாவு
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • ஐஸ் தண்ணீர் (மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு)
  • மசாலா (ஸ்பிரிங் ரோல் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • மக்காச்சோள மாவு (தண்ணீருடன் பசை போல குழைக்க, ஒட்டுவதற்கு)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. மைதா, சோளமாவு, பேகிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலித்துக் கொள்ளவும். இதோடு எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசறி விட்டு ஐஸ் தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசையவும்.
  2. சிறிது நேரம் மூடி வைத்து பிறகு நன்றாக மாவு தளரும்படி அடித்துப் பிசையவும். பிசைந்த மாவை இரண்டு பாகங்களாக்கி ஒவ்வொன்றையும் மெல்லிய நீள சதுரமாக இடவும். 4 அங்குல சதுரத் துண்டங்களாக வெட்டவும்.
  3. மக்காச்சோள மாவு அல்லது சிறிதளவு மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசைபோல குழைக்கவும். செய்த மசாலாவில் சிறிய நெல்லிக்காயளவு எடுத்து சதுரமாக வெட்டிய சப்பாத்தியின் பத்தியில் வைக்கவும்.
  4. அதன்மேல் சிறிய வட்ட சப்பாத்தி செய்து சோளமாவு பேஸ்ட் உபயோகப்படுத்தி மசாலா வெளியில் வராதபடி ஒட்டவும். சதுரத்தின் நான்கு மூலைகளையும் மத்தியில் தூக்கிவிட்டு பிறகு சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
  5. தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும். மாற்று செய்முறை: பலவிதமான வடிவங்களில் இதைச் செய்யலாம் -- பர்ஸ் மாதிரி, தொப்பி மாதிரி மற்றும் அவரவர் விருப்பப்படி செய்து பொரிக்கலாம்.