வெங்காய தூள் பக்கடா

வகைகள்பொரித்த பலகாரம்

பொருட்கள்

  • 1 கிலோ கடலை மாவு
  • 300 மில்லி கடலை எண்ணெய்
  • 1½ கிலோ பெல்லாரி வெங்காயம்
  • ½ தேக்கரண்டி சோடா உப்பு
  • 25 கிராம் மிளகாய்
  • தேவையானது உப்பு (சுடுவதற்கு எண்ணெய்)

செய்முறை

  1. வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும். கடலை மாவில் சோடா உப்பு, உப்பு, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.