
சேமியா பக்கோடா
சைவம்வறுத்த சேமியாவை மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மசாலாவுடன் கலந்து மொறுமொறுப்பான பக்கோடாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 3 பெரிய வெங்காயம்
- 1 கப் சேமியா
- 1 வேகவைத்த உருளைக்கிழங்கு (பெரியது)
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 6 பச்சை மிளகாய்
- தேவைக்கேற்ப உப்பு
- 1/4 கப் கடலை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- புதினாத் தழை, முந்திரி (விருப்பப்படி)
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மெலிதாக நீளவாக்கில் அரியவும்.
- சேமியாவை சிறிது நெய் பூசி பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த சேமியாவின் மேல் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி உடனே வடித்துவிடவும். மேலும் கொஞ்சம் பச்சை தண்ணீரை ஊற்றி வடிதட்டின் உதவியால் வடிகட்டவும்.
- உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொண்டு அதோடு சேமியாவையும் மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதோடு ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கலக்கவும்.
- மற்ற பக்கோடாக்களைப் போல சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.