வெந்தைய குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

வெந்தைய குழம்பு

சைவம்

வெந்தயமும் பருப்புகளும் புளி, சாம்பார் பொடி கிரேவியில் வேகவைக்கப்படும் தனித்துவமான புளிப்பு குழம்பு.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 1 1/2 கிலோ உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 60 கிராம் சாம்பார் பொடி
  • 6 கிராம் பட்ட மிளகாய்
  • தேவைக்கேற்றவை உப்பு
  • 150 கிராம் துவரம் பருப்பு
  • 1 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 40 கிராம் புளி
  • 80 கிராம் வெந்தையம்

செய்முறை

  1. புளியை ஒரு பாத்திரத்தில் 125 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக பிசைந்து சக்கையை நீக்கிவிட்டு கரைத்த புளிச்சாற்றில் சாம்பார் பொடியை போட்டு நன்றாக கலக்க வேண்டும். 100 மில்லி தண்ணீர் ஊற்றி வெந்தையம் பருப்பை சுத்தம் செய்து அடுப்பில் வைத்து நன்றாக வேக விடவும். வெந்தபின் ஒரு தனிப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். வாணலியில் தேவைக்கேற்ற நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, பச்சைமிளகாயை வதக்கவும். புளிச்சாற்றை கொதிக்க வைக்கவும். பின் பருப்பு வெந்தையம் போட்டு மீண்டும் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பை, கருவேப்பிலையை உருவிப் போட்டு கடுகு பொறிந்ததும் தாளித்துப் போட்டு இறக்கவும்.