வெண்டைக்காய் புளிக்குழம்பு
வெண்டைக்காய் புளிக்குழம்பு
வகைகள்குழம்பு
பொருட்கள்
- 250 கிராம் வெண்டைக்காய்
- 2 கரண்டி எண்ணெய்
- கடுகு, உளுந்தம்பருப்பு
- 4 வெங்காயம் (நறுக்கியது)
- 1 பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- 2 சில தேங்காய் (பால் எடுத்தது)
- மசால், உப்பு, மஞ்சள்
- நெல்லிக்காயளவு புளி
செய்முறை
- 250 கிராம் வெண்டைக்காயை சுத்தம் செய்து பெரிய வில்லைகளாக நறுக்கி 2 கரண்டி எண்ணெயில் கடுகு உளுந்தம்பருப்பு வெடித்ததும் நறுக்கிய 4 வெங்காயம், 1 பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் 2 சில தேங்காயை பால் எடுத்து அரைத்த மசால், உப்பு, மஞ்சள் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பு வற்றிவரும் போது நெல்லிக் காயளவு புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.