வெண்டைக்காய் பக்கோடா-இன் புகைப்படம், தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

வெண்டைக்காய் பக்கோடா

சைவம்

ஒட்டும் தன்மை போக புளித் தண்ணீரில் வேகவைத்த வெண்டைக்காயை மசாலா மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் பொதிந்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் பக்கோடா.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • நெல்லிக்காய் அளவு புளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 கப் காய்ந்த ரொட்டித்தூள்
  • 1/2 கப் கடலை மாவு (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1/4 கப் அரிசி மாவு (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1/2 டீஸ்பூன் உப்பு (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1 டீஸ்பூன் தனியா பொடி (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1 சிட்டிகை சமையல் சோடா (மேல்மாவு கலப்பதற்கு)
  • 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி (மேல்மாவு கலப்பதற்கு)

செய்முறை

  1. வெண்டைக்காயின் காம்பு பாகத்தையும் மேல் பகுதியையும் அறிந்து எடுக்கவும்.
  2. ஒரு கிண்ணத்தில் நீர்க்கக் கரைத்த புளித் தண்ணீரோடு உப்பு மஞ்சள் தூள் போட்டு சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது வெண்டைக்காயைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  3. 2 நிமிடம் கழித்து தண்ணீரை முழுவதும் வடித்து விடவும். ஒரு துணியின் மேல் ஆறவைத்து சாம்போக துடைத்துவிடவும்.
  4. மேல் மாவிற்கு குறிப்பிடப்பட்ட பொருட்களை தண்ணீர் சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.
  5. வெண்டைக்காயை இந்த மாவில் தோய்த்து பிரட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  6. சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  7. மாற்று செய்முறை: வெண்டைக்காயை நீளவாக்கில் நான்காக அரியவும். மக்காச் சோளமாவு, அரிசி மாவு, மைதா மாவு சம அளவு கலந்து உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து காயில் பிசறி விட்டு சூடான எண்ணெயில் பொரிக்கவும்.