வெண்டைக்காய் சூப்

வகைகள்சூப்

பொருட்கள்

  • ¼ கிலோ வெண்டைக்காய்
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 மிளகு
  • 1 பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவு இலவங்கபட்டை இலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 50 கிராம் துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு

செய்முறை

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கபட்டை, இலை, மிளகு, பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் மூன்று அங்குலமாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து மிகவும் நன்றாக வதக்கவும். மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். வெண்டைக்காய் வெந்ததும், வேக வைத்து மசித்த பருப்பை இக்கலவையுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  2. குறிப்பு: வெண்டைக்காயை வதக்கும் போது 1 ஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்தால் சீக்கிரம் வதங்கி விடும். நூல்நூலாக வராது.