வெஜிடபிள் கோதுமை ரொட்டி
வெஜிடபிள் கோதுமை ரொட்டி
வகைகள்சப்பாத்தி வகை
பொருட்கள்
- 250 கிராம் கோதுமை மாவு
- 200 கிராம் காரட்
- சிறிதளவு கறிவேப்பிலை, மல்லிதழை
- 100 கிராம் பீட்ரூட்
- 200 கிராம் சீமை வெங்காயம்
- சிறிதளவு உப்பு, கறிமசால், மிளகாய்தூள்
செய்முறை
- காரட், பீட்ரூட் இரண்டையும் துருவி வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் துருவிய காரட், பீட்ரூட், உப்பு, மிளகாய்தூள் (தேவைக்கேற்ப), கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு, சப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும். 30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு சாப்பிடவும். சுவையாக இருக்கும்.