
வெஜிடபிள் சிஸ்லர்ஸ்
சைவம்தோசைக்கல்லில் வாட்டிய காய்கறிகளையும் தயார் கட்லெட்டையும் சூடான சிஸ்லர் தட்டில் சாஸ், வினிகர் ஊற்றி சிர்ர் சப்தத்துடன் பரிமாறப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 2, 2 வெங்காயம், கேரட்
- 2 (அ) 3 தக்காளி
- 150 கிராம் வெள்ளரிக்காய்
- 150 கிராம் முட்டைக்கோஸ்
- 100 கிராம் உரித்த பட்டாணி
- 2 குடமிளகாய்
- 1 (அ) 2 வெங்காயத் தாள்
- 2 உருளைக்கிழங்கு (வேக வைத்தது)
- வோர்செஸ்டர்ஷயர் சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் (தேவைக்கேற்ப)
- 2 சுட்ட கட்லெட்
- 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
- 100 கிராம் வெண்ணெய்
- 6 காய்ந்த மிளகாய் (அரைக்க)
- 3 பல்லு பூண்டு (அரைக்க)
- 1/4 டீஸ்பூன் கடுகு (அரைக்க)
- 1/4 டீஸ்பூன் உப்பு (அரைக்க)
செய்முறை
- பட்டாணியை வேக வைக்கவும். முழு கேரட் மற்றும் 3 அங்குல சதுரத் துண்டங்களாக அரிந்த கோஸ் இரண்டையும் மிகச் சூடான தண்ணீரில் போட்டு 2 நிமிடம் வைக்கவும். பிறகு தண்ணீரை வடிக்கவும்.
- வெங்காயம், குடமிளகாய், தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை மெல்லிய வட்டத் துண்டங்களாக்கவும்.
- சுடுதண்ணீரில் போட்டெடுத்த கேரட்டை மெல்லிய வட்டத் துண்டங்களாக அரியவும். உருளைக்கிழங்கை தோலெடுத்து வட்டமாக அரியவும்.
- எல்லா காய்கறிகளையும் முள்கரண்டி (Fork) உதவியால் குத்தி அரைத்த விழுதை அதில் பூசவும்.
- ஒரு தோசைக்கல்லில் பாதி வெண்ணெயை உருக்கி அதில் இந்த காய்கறிகளை அடுக்கவும். லேசாக சுட்டதும் திருப்பிவிட்டு கட்டு எடுக்கவும்.
- சிஸ்லர் செய்யும் தோசைக்கல்லை நன்றாகச் சூடாக்கி மத்தியில் சுட்ட கட்லெட்டையும் மற்ற காய்கறிகளையும் அலங்காரமாக அடுக்கவும்.
- எல்லா சாஸ் வகைகளிலும் 1½ டேபிள் ஸ்பூன் எடுத்துக் கலந்து மேலே தெளித்து பாதி வெண்ணெயை காய்கறிகளைச் சுற்றி விடவும்.
- நன்றாகச் சூடானதும் வினிகரை மேலே தெளிக்கவும். தெளித்த உடனே அதிலிருந்து சப்தம் வரும். அந்த சப்தத்தோடு சூடான கல்லை அப்படியே அதற்கென உள்ள மர ஸ்டாண்டில் வைத்து பரிமாறவும்.
- குறிப்பு: வெண்ணெய் மற்றும் வினிகர் சூடான கல்லின் மேல் சேரும்போது படபடவென்று சப்தம் வருகிறது. அதனாலேயே இதற்கு 'சிஸ்லர்ஸ்' (Sizzlers) என்ற பெயர். சிஸ்லர் பான் (Sizzler Pan) என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும்.