வெண்பொங்கல்
வெண்பொங்கல்
வகைகள்சாதம் வகை
பொருட்கள்
- 250 கிராம் பச்சரிசி
- 1 டீஸ்பூன் நெய் அல்லது டால்டா
- 600 மி.லி. தண்ணீர்
- சிறிதளவு கருவேப்பிலை
- 50 கிராம் வறுத்த பாசிப்பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகு, சீரகம்
- சிறிதளவு முந்திரிபருப்பு
- சிறிதளவு உப்பு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 600 மி.லி. நீர் ஊற்றி அடுப்பில் வைத்து பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழைந்து போட்டு உப்பு போட்டு குழைய வேக வைத்து இறக்கவும். மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுத்தவுடன் சாதத்துடன் கலந்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.