
காய்கறி சாம்பார்
சைவம்வேகவைத்த துவரம் பருப்பை காய்கறிகள், புளி, சாம்பார் பொடியுடன் கொதிக்க வைத்து கடுகு-கருவேப்பிலை தாளிப்புடன் செய்யப்படும் சாம்பார்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாம்பார்
பொருட்கள்
- துவரம் பருப்பு (நன்றாக வேகவைத்தது)
- 1 காய்கறி (விரும்பியது - தக்காளி, கத்திரி, முருங்கைக்காய், காலிஃபிளவர் தண்டு, அவரைக்காய், முள்ளங்கி இவற்றில் ஏதேனும்)
- 1 வெங்காயம்
- புளி (கரைத்தது)
- தேவைக்கேற்ப சாம்பார் பொடி
- தேவைக்கேற்ப உப்பு
- கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை (தாளிக்க)
- மல்லித்தழை (நறுக்கியது)
- வெல்லம் (ஒரு சிறு துண்டு, விரும்பினால்)
செய்முறை
- துவரம் பருப்பை நன்றாக வேக விடவும். விரும்பப்பட்ட ஏதாவது ஒரு காயையும் வெங்காயத்தையும் வதக்கி அத்துடன் கரைத்த புளியையும், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வேக விடவும்.
- நன்றாக வெந்தபின் வெந்த பருப்பையும் சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து செய்யவும். மல்லி தழை வெட்டிச் சேர்க்கவும்.
- இதே போல் பலவித காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் செய்யலாம். தக்காளி, கத்திரி, முருங்கைக்காய், காளிப்ளவர் தடியங்காய், அவரைக்காய், முள்ளங்கி இவைகளில் விருப்பமானதை சேர்த்துக் கொள்ளலாம்.
- புளியைக் குறைத்து மாங்காய் அல்லது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம். சாம்பாரில் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.