காய்கறி சாண்ட்விச்-இன் புகைப்படம், முக்கோண வடிவில் வெட்டி, காய்கறி அடுக்குகள் தெரியும்

காய்கறி சாண்ட்விச்

சைவம்

வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெங்காய வட்டங்களை புதினா சட்னி தடவிய ரொட்டிக்குள் அடுக்கி தழைகள், எலுமிச்சை சேர்த்து தயாரிக்கப்படும் சமையல் தேவையில்லா சாண்ட்விச்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
எளிது
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 1 ரொட்டி (முழு ரொட்டி, ஸ்லைஸ் செய்தது)
  • 100 கிராம் வெண்ணெய்
  • 3 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி (இப் புத்தகத்தின் கடைசியில் உள்ள செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது; மிகக் குறைந்த தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்)
  • 1 வெள்ளரிக்காய்
  • 2 கேரட்
  • 2 தக்காளி
  • 6 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • உப்பு, மிளகுப்பொடி (தேவைக்கேற்ப)
  • 1 எலுமிச்சம்பழம்

செய்முறை

  1. காய்கறிகளை தோல் சீவி மெல்லிய வட்டத் துண்டுகளாக அரியவும்.
  2. பச்சைமிளகாயை விதை எடுத்துவிட்டு மெல்லிய துண்டங்களாக அரியவும். கொத்தமல்லித் தழையையும் மிகப் பொடியாக அரியவும்.
  3. பிரட் துண்டங்களின் ஓரங்களை வெட்டிவிட்டு ஒவ்வொரு துண்டின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவவும்.
  4. ஒரு ஸ்லைசை எடுத்து வெண்ணெய் தடவிய பக்கத்தின் மேல் சட்னி தடவவும்.
  5. அதன் மேல் வெள்ளரிக்காய், மற்றும் கேரட் துண்டங்களை அடுக்கவும்.
  6. அதன் மேல் இன்னுமொரு ஸ்லைஸ் வைக்கவும்.
  7. அதன் மேல் சட்னி தடவி மேலே வெங்காயம் தக்காளி பரப்பவும். மத்தியில் மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழையை வைக்கவும்.
  8. மேலே சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி, எலுமிச்சை ரசம் சில சொட்டுக்கள் விடவும்.
  9. அதற்கும் மேலே மூன்றாவது ரொட்டித் துண்டை வெண்ணெய் பூசிய பாகம் காய்கறியின் மேல் படுமாறு மூடவும்.
  10. நன்றாக அமுக்கி ஒரு கூரிய கத்தியின் உதவியால் நான்கு சதுரத் துண்டங்களாக கீழ்அடுக்குவரை அரியவும். மேலே தக்காளி சாஸ் தெளித்து உடனே பரிமாறவும்.