
வெஜிடபிள் கோன்ஸ்
சைவம்பஃப் பேஸ்ட்ரி ரிப்பன்களை கூம்பு அச்சின் மேல் சுற்றி பேக் செய்தோ பொரித்தோ மொறுமொறுப்பாக்கி மசாலா காய்கறி பூரணம் நிரப்பப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 45 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 70 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- மைதா மாவு (வெஜிடபிள் பஃப் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி மாவும் அடுக்குகளும் தயாரிக்கவும்)
- வெண்ணெய் (கூம்பு அச்சின் மேல் தடவ)
- மசாலா (வெஜிடபிள் பஃப் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
- மைதா மாவு (பொரித்த கூம்பு மாற்றுமுறைக்கு)
- ரவை, பேகிங் பவுடர், உப்பு, வெண்ணெய் (சிறிதளவு, பொரித்த கூம்பு மாற்றுமுறைக்கு)
- எண்ணெய் (பொரித்த கூம்பு மாற்றுமுறைக்கு)
செய்முறை
- முன்கூறிய பஃப் குறிப்பினபடி மைதா மாவு தயாரிக்கவும். மெல்லிய சப்பாத்தி போல இட்டு 1/2 அங்குல அகலத்தில் ரிப்பன் போல கத்தரிக்கவும்.
- தகரம் அல்லது ஏதாவது உலோகத்தில் செய்துள்ள கோன்ஸ் (கூம்பு வடிவில் உள்ளவை) எடுத்துக் கொண்டு மேலே சிறிது வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த ரிப்பன்களை பக்கமாக லேசாக ஒன்றன் மேல் ஒன்று ஒட்டியிருக்கும்படி சுற்றவும்.
- ஓவனில் (Oven) வைத்து மேலே கலர் மாறும்வரை பேக் செய்யவும். மேலே சிறிது உருக்கிய வெண்ணெய் தடவவும். தயாரித்த மசாலாவை உள்ளே நிரப்பி பரிமாறவும்.
- மாற்று முறை -- பொரித்த கூம்புகள்: மைதா மாவோடு சிறிது ரவை, பேகிங் பவுடர், உப்பு, சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசையவும். நன்றாகப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு முன்பு கூறியபடி கத்தரித்து கூம்பின் மேல் சுற்றி சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொரிக்கும் போதே கூம்புகள் எண்ணெயில் பிரிந்து வந்துவிடும். பொன்னிறத்தில் பொரித்து மசாலாவை உள்ளே நிரப்பி பரிமாறவும்.