
வெஜிடபிள் கட்லெட்
சைவம்மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்டை மசாலாவுடன் வதக்கி அழகிய வடிவங்களில் ரொட்டித் தூளில் பொதிந்து தோசைக்கல்லில் பொன்னிறமாக சுடப்படும் கட்லெட்.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்
பொருட்கள்
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 4 கேரட்
- 2 பீட்ரூட்
- 1/2 கப் உரித்த பச்சைப் பட்டாணி
- 1/2 கப் காய்ந்த ரொட்டித்தூள் (அ) ரஸ்க் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் மைதா
- தேவைக்கேற்ப உப்பு
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம்மசாலாப் பொடி
- எண்ணெய் (சுடுவதற்குத் தேவையான அளவு)
செய்முறை
- வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும். குக்கரில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வைத்து, மேல் பாத்திரத்தில் கேரட், தோல் சீவிய பீட்ரூட், முழு பட்டாணி வைக்கவும் (தண்ணீர் சேர்க்காமல்). வெயிட் வைத்த பிறகு 7 நிமிடங்கள் அல்லது 2 விசில் சத்தம் வரும்வரை வேக வைக்கவும்.
- வெந்ததும் உருளைக்கிழங்கை தோலெடுத்து நன்றாக மசிக்கவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை துருவவும்.
- ஒரு அகலமான வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயத்தை சிவக்க வதக்கி வேந்த காய்கறிகளைச் சேர்க்கவும். ஈரம் வற்றும்வரை நன்கு வதக்கி கடைசியில் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
- ஆறிய பிறகு ஆரஞ்சுப்பழ அளவு உருண்டைகளாக்கவும். மைதாவோடு சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும்.
- உருண்டைகளை இந்த மைதா பசையில் உருட்டி எடுத்து பிரட் தூளில் புரட்டி அதன் பின் 1/2 அங்குல கனத்திற்கு தட்டையாக்கவும். விருப்பமான வடிவில் தயாரிக்கவும் (♥♦●★).
- சிறிது குழிவாக உள்ள தோசைக்கல்லில் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி 4 அல்லது 5 கட்லெட்டை அதில் வைக்கவும். கீழ்பாகம் நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு மற்ற பக்கமும் தேவைப்பட்டால் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுடவும். (ஒரே முறை திருப்பிப் போடவும், அடிக்கடி திருப்பிவிட்டால் கட்லெட் உடைந்து விடும்.)
- சூடாக தக்காளி சாஸ், புதினா சட்னி மற்றும் வட்டவடிவமாக அரிந்த வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயுடன் பரிமாறவும்.
- மாற்று முறை: மைதா மற்றும் பிரட் தூள் உபயோகப்படுத்துவதற்கு பதில் மக்காச்சோள மாவில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம். மேலே முந்திரி பருப்பு வைத்தும் அலங்கரிக்கலாம்.
- குறிப்பு: வேந்த காய்கறிகளை (கேரட், பீட்ரூட்) சிறிது கூட தண்ணீர் இல்லாமல் பிழிந்து பிறகு வதக்கவும் (இந்த தண்ணீரை, சூப் அல்லது ரசத்திற்கு சேர்க்கலாம்). அதிக ஈரப்பசை இருந்தால் கட்லெட் உடைந்துவிடும். என்றாவது தவறி அம்மாதிரி ஆகிவிட்டால், பிரட்டை (Fresh Bread) மிக்ஸியில் தூளாக்கி காய்கறி கலவையில் கலந்து கட்லெட் தயாரிக்கவும் -- உடையாமல் நன்கு வரும்.