
வெஜிடபிள் பர்கர்ஸ்
சைவம்பொரித்த வட்ட கட்லெட்டை முட்டைக்கோஸ், வெங்காயம், பீட்ரூட், தக்காளியுடன் வெண்ணெய் தடவிய பன்னுக்குள் அடுக்கி தயாரிக்கப்படும் வெஜிடபிள் பர்கர்.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 6 தயாரித்து வைத்த கட்லெட்
- 6 வட்டமான பன்
- 150 கிராம் முட்டைக்கோஸ்
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பீட்ரூட்
- தக்காளி சாஸ் (தேவைக்கேற்ப)
- துருவிய சீஸ் (விருப்பமானால்)
- 50 கிராம் வெண்ணெய்
செய்முறை
- கட்லெட்டை வட்டவடிவில் மெலிதாகச் செய்து பொரித்தெடுக்கவும்.
- பன்னை மத்தியில் இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவி லேசாக தோசைக்கல்லில் இருபுறமும் சூடாக்கி எடுக்கவும்.
- முட்டைக்கோஸ் இலைகளை தனித்தனியாகப் பிரித்தெடுத்து சூடான தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அதில் போட்டு வைக்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்துவிட்டு இலைகளை ஈரம் வற்றுவதற்கான ஒரு துணியின் மேல் வைக்கவும்.
- வெங்காயம், தக்காளியை மெல்லிய வட்டங்களாக அரியவும். முழு பீட்ரூட்டை வேகவைத்து தோலெடுத்து மெலிதாக சிப்ஸ் போல அரியவும்.
- சுட்ட பன்னின் கீழ்ப்பாகத்தின் மேல் ஒரு கோஸ் இலை, அதன் மேல் வெங்காயம், கட்லெட், பீட்ரூட், தக்காளி போன்றவைகளை அலங்காரமாக அடுக்கவும்.
- பன்னின் மேல்பாகத்தை அதன்மேல் வைத்து அதற்கென கிடைக்கும் பிளாஸ்டிக் குச்சி அல்லது பிளாஸ்டிக் முள்கரண்டியால் மேலே குத்தவும். அப்போதுதான் காய்கறிகள் கீழே விழாமல் இருக்கும்.
- பரிமாறும் போது தட்டில் ஒரு சாலட் இலை, பொரித்த ஃபிங்கர் சிப்ஸ், தக்காளி சாஸ் இவற்றை அலங்காரமாக பக்கத்தில் வைத்து பரிமாறவும்.
- சீஸ் பர்கர் செய்ய விருப்பப்பட்டால் பன்னின் மேல் வெண்ணெய் பூசி, மெலிதாக அரிந்த சீஸை அதன் மேல் வைத்த பிறகு மற்ற காய்கறிகள், கட்லெட் அடுக்கவும், சூடாக்கிய ஓவனில் 10 நிமிடம் வைத்து சூடாகப் பரிமாறவும்.
- குறிப்பு: உப்பு காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் அரிந்த வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டின் மேல் சிறிது உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு பிழிந்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு பர்கரின் மேல் அடுக்கலாம்.