
தக்காளி டோஸ்ட்
சைவம்வதக்கிய தக்காளி-வெங்காய மசாலாவை ரொட்டியின் மேல் பரப்பி நெய் விட்டு தோசைக்கல்லில் சுடப்படும் தக்காளி டோஸ்ட்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்
பொருட்கள்
- 12 துண்டுகள் ரொட்டி
- 1/4 கிலோ தக்காளி
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 3/4 டீஸ்பூன் உப்பு
- 3/4 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
- எண்ணெய் (தேவையான அளவு)
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- ரொட்டித் துண்டின் இரு பக்கமும் நெய் தடவவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டி விதைகளை நீக்கவும்.
- இதோடு வெங்காயம், கொத்தமல்லி, சர்க்கரை, உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கலக்கவும்.
- ஒரு மெல்லிய தோசைக் கல்லைக் காய வைத்து ஒரு ரொட்டித் துண்டை அதன் மேல் போடவும்.
- கீழ்ப்பாகம் லேசாகச் சுட்டவுடன் திருப்பிப் போட்டு மேலே ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளிக் கலவையை பரப்பவும்.
- சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டுச் சுடவும்.
- திருப்பிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய்விட்டு ஒரு நிமிடம் சுட்டு உடனே பரிமாறவும்.