உளுந்து வடை
உளுந்து வடை
வகைகள்வடை
பொருட்கள்
- 250 மி.லி. தோல் இல்லாத உளுந்தம் பருப்பு
- சிறிது காயம்
- தேவையான அளவு உப்பு
- 50 கிராம் வெங்காயம் (சிறியது, பொடியாக நறுக்கியது)
- 6 பச்சை மிளகாய்
- சிறிது இஞ்சி
- கருவேப்பிலை
- மல்லிச்செடி
- தட்டிய மிளகு
- 1 மேஜைக் கரண்டி அரிசி மாவு (விருப்பப்படி)
செய்முறை
- 250 மி.லி. தோல் இல்லாத உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் நனைய வைத்து, சிறிது காயம் சேர்த்து அதிகம் இளக்கம் இல்லாமல் பொங்க ஆட்டித் தோண்டும் போது தேவையான உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி தோண்டி, சின்ன வெங்காயம் வட்டம் வட்டமாகப் பொடியாக நறுக்கியது 50 கிராம், பச்சைமிளகாய் 6, இஞ்சி சிறிது, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு இவற்றைப் போட்டு கலந்து கொண்டு வாணலியில் ரீபெண்ட் ஆயிலைக் காய வைத்து இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்துத் தட்டி நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையைப் போட்டு, வடைக் கம்பியால் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும். மாவில் 1 மேஜைக் கரண்டி அரிசி மாவு கலந்து சுட்டால் வடை மொறு மொறுப்பாக இருக்கும்.