தயிர் வடை

வகைகள்வடை

பொருட்கள்

  • 200 கிராம் தயிர்
  • 1/4 மூடி தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • சிறிது உப்பு

செய்முறை

  1. உளுந்து வடை தயார் செய்யவும். பிறகு, அதை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து, தயிரில் போடவும். தேங்காய், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். 'தயிர் வடை ரெடி'