
புளிக்கறி
அசைவம்புளி, தயிர், நட்சத்திர பாக்கு உள்ளிட்ட முழு மசாலாக்களுடன் ஊறவைத்த இறைச்சியை மென்மையாகும் வரை வேகவைக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கறி
பொருட்கள்
- ¼ கிலோ கறி
- 6 வெள்ளைப்பூண்டு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 துண்டு பட்டை
- 1 ஸ்பூன் சோம்பு
- நெல்லிக்காயளவு புளி
- 3 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 11 மிளகாய் வற்றல்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 துண்டு இஞ்சி
- 2 துண்டு அன்னாச்சிப்பூ
- 100 கிராம் தயிர்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 50 கிராம் எண்ணை
செய்முறை
- முதலில் கறியை பெரியதும் சிறியதும் அல்லாமல் நடுத்தரமான அளவில் வெட்டிக் கழுவி பாத்திரத்தில் போட்டு அதனுடன் வற்றல், பூண்டு, மிளகு, சீரகம், மல்லி, இஞ்சி, 1 துண்டு ஏலக்காய், கிராம்பு இவைகளை முழுதாகச் சேர்க்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, தயிர் மஞ்சள் தூள், எண்ணெய் ஊற்றி அளவான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும். (அடுப்பில் சிறு தீயாகவே எரிய விடவும்) ¼ வேக்காட்டில் அளவாக உப்பு சேர்க்கவும். நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்க வேண்டும். இந்த புளிக்கறி 2,3 நாள் கூட சுவை கெடாமல் இருக்கும்.