
இனிப்பு ஆப்பம்
சைவம்வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்த அரிசி-உளுந்து மாவை ஊற வைத்து ஆப்பச்சட்டியில் சுடப்படும் இனிப்பு ஆப்பம்.
- தயாரிப்பு நேரம்
- 6 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 390 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்ஆவியில் வேகவைத்த டிபன்இனிப்பு
பொருட்கள்
- 1½ ஆழாக்கு பச்சரிசி
- 1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
- 50 கிராம் உளுந்து
- 2 ஸ்பூன் வெந்தயம்
- 4 கிலோ வெல்லம்
- தேவையான அளவு சோடா உப்பு
- தேவைக்கேற்ப ஏலக்காய்
- அரை டம்ளர் இளநீர் (விரும்பினால்)
செய்முறை
- அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை 5 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- மாவை அள்ளுவதற்கு முன்பு வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- மாவை சில மணி நேரம் ஊற வைக்கவும். இதில் அரை டம்ளர் இளநீர் சேர்த்தால் சுவை கூடும்.
- ஆப்பம் சுடப் போகும் சமயத்தில் மாவில், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்க்கலாம். ஆப்பசட்டியை எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும்.
- தோசை மாவு பதத்தைவிட சற்று தண்ணீரியமாக மாவைக் கரைத்து, சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும். சட்டியின் உட்பக்கத்தில் மாவு பரவியதும் சட்டியை மூடவும். மிதமான வெப்பத்தில் ஆப்பம் வெந்து எழும்பி வரும்.