இனிப்பு மாங்காய் ஊறுகாய்

வகைகள்ஊறுகாய்

பொருட்கள்

  • மாங்காய் (நல்ல பெரிய மாங்காய்கள்)
  • வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 கரண்டி எண்ணெய்
  • சிறிதளவு கடுகு (தாளிக்க)
  • சிறிதளவு தண்ணீர்
  • தேவையானது உப்பு
  • தேவையானது சீனி அல்லது தட்டிய வெல்லம்

செய்முறை

  1. நல்ல பெரிய மாங்காய்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்து விட்டு தோலைச் சீவி பெரிய துண்டுகளாக தகடாக சில்சில்லாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், 4 பச்சை மிளகாய், 2 கருவேப்பிலை இவைகளை வெட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை போட்டு சிவந்ததும் மாங்காய் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து வேக வைக்கவும். நன்றாக வெந்தபின் கரண்டியால் மசித்துவிட்டு தேவையான சீனி அல்லது தட்டிய வெல்லம் சேர்த்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும். மாங்காய் கூழ் போல் வெந்த பிறகு தான் சீனியை சேர்க்க வேண்டும். இந்த தயாரிப்பில் காரம், புளிப்பு, இனிப்பு, உப்பு ஆகிய சுவைகள் கலந்திருக்கும்.