
பிரட்டுக்கறி
அசைவம்மிளகாய், சீரகம் அரைத்த மசாலாவில் நிறைய வெங்காயத்துடன் இறைச்சி பிரட்டப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- ¼ கிலோ வீசை கறி
- 3 தேக்கரண்டி சீரகம்
- 9 மிளகாய் வற்றல்
- மஞ்சள் தூள்
- 20 நறுக்கிய வெங்காயம்
- உப்பு
செய்முறை
- ¼ வீசை கறியைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 7, சீரகம் 3 தேக்கரண்டி இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பின் 20 நறுக்கிய வெங்காயத்தையும் கறியையும் போட்டு வதக்கி அரைத்த மசாலுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள் கலந்து கறியில் போடவும். 3/8படி தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கறியை வேக வைக்கவும். கறி வெந்த பின் நீர் வற்றி சிவந்த பின் இறக்கவும்.