ஸ்டப் செய்த குடமிளகாய்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

ஸ்டப் செய்த குடமிளகாய்

சைவம்

வேக வைத்த குடமிளகாய் பாதிகளுக்குள் மசாலா கலவை காய்கறி பூரணம் நிரப்பி கடலைமாவுப் பசையால் மூடி வாணலியில் வேக வைக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 6 குடமிளகாய் (ஒரே மாதிரியான அளவுள்ளது)
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2 கப் பொடியாக நறுக்கிய ஆவியில் வேகவைத்த காய்கறிகள் (கேரட், காலிப்ளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முட்டைக்கோஸ்)
  • 3/4 டீஸ்பூன் வறுத்து பொடி செய்த சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  • 1 எலுமிச்சம்பழம்
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • ருசிக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (தேவைக்கேற்ப)
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை

செய்முறை

  1. குடமிளகாயைக் கழுவி குறுக்கில் வெட்டி ஒரே மாதிரியான இரண்டு பாகங்களாக்கவும். உள்ளே உள்ள விதையை எடுத்துவிடவும்.
  2. சூடான உப்பு சேர்த்த தண்ணீரில் 3 நிமிடம் போட்டு வைக்கவும். தண்ணீரிலிருந்து எடுத்து 2 நிமிடம் கவிழ்த்து வைக்கவும்.
  3. மசாலா செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் எண்ணெயிலேயே மிளகாய் விழுது, மிளகாய்த் தூள், கரம்மசாலா பொடி சேர்க்கவும்.
  4. தண்ணீரில்லாமல் வடித்த வேக வைத்த காய்கறிகள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். மசாலா வாசனை வரும்வரை கிளறி கடைசியில் உப்பு, சீரகத் தூள் சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி கலக்கவும்.
  5. இந்த விழுதை குடமிளகாயின் உள்ளே நிரப்பவும். கடலை மாவைக் குழைத்து மசாலாவின் மேலே பூசவும்.
  6. அகலமான நான்-ஸ்டிக் பேன் (Non-stick pan) அல்லது வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு குடமிளகாயை அதில் மசாலா வைத்தபாகம் மேலே இருக்கும்படி அடுக்கவும். மூடியால் மூடி குறைந்த அனலில் சிறிது நேரம் வைக்கவும்.
  7. மூடியைத் திறந்து ஒரு தோசைத் திருப்பியின் உதவியால் மெதுவாக, ஒவ்வொன்றாகத் திருப்பிப் போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து தட்டில் அடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
  8. மாற்று முறை: இதையே ஓவனில் பேக்(Bake) செய்யலாம் -- கடலை மாவிற்குப் பதில் மேலே துருவிய சீஸ் தூவி பேக் செய்யவும். வேறு எந்த மசாலாவும் உபயோகித்து தயாரிக்கலாம். காய்கறிகளுக்குப் பதில் மக்காச்சோளத்தை வேகவைத்து மசாலா தயாரித்து உள்ளே நிரப்பலாம். பனீர் அல்லது உருளைக்கிழங்கு, பட்டாணி மட்டும் சேர்த்தும் மசாலா செய்யலாம். குடமிளகாயே சிறிது காரமாக உள்ளதால் உள்ளே நிரப்பும் மசாலாவில் காரத்தைக் குறைத்து சேர்க்கவும்.
  9. குடமிளகாயை இரண்டாக அரியாமல், காம்பு உள்ள பகுதியில் 1/4 அங்குல கனத்திற்கு வெட்டி மூடி போலவும் உபயோகிக்கலாம்.