
ஸ்பிரிங் ரோல்
சைவம்சோயா-மிளகாய் சாஸில் வதக்கிய கலவை காய்கறிகளை கையால் செய்த மைதா உறையில் சுருட்டி ஆவியில் வேக வைத்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் சீன பாணி ரோல்.
- தயாரிப்பு நேரம்
- 50 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 75 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 2 கப் மைதா (குவித்து)
- 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 2 சிட்டிகை பேகிங் பவுடர்
- 2 சிட்டிகை சமையல் சோடா
- 1 டீஸ்பூன் உப்பு
- தண்ணீர் (தேவைக்கேற்ப)
- 2 1/2 டீஸ்பூன் மைதா (எண்ணெயுடன் குழைக்க (1))
- 3 டீஸ்பூன் மைதா (தண்ணீருடன் குழைக்க (2), ஒட்டுவதற்கான பசை)
- 2 கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்
- 1 1/2 கப் துருவிய கேரட்
- 1 கப் நறுக்கிய காலிப்ளவர்
- 1 கப் பொடியாக நறுக்கிய குடமிளகாய்
- 3/4 கப் நறுக்கிய வெங்காயத் தாள்
- 1/2 டீஸ்பூன் சீன உப்பு (அஜி-நோ-மோட்டோ)
- 1 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
- 1 டீஸ்பூன் மிளகாய் சாஸ்
- 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
- வோர்செஸ்டர் ஷயர் சாஸ் (தேவைக்கேற்ப)
- உப்பு (தேவைக்கேற்ப)
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் மிளகுப் பொடி
- எண்ணெய் (சுடுவதற்கு)
- 3 பல்லு பூண்டு (அரைக்க)
- 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள் (அரைக்க)
செய்முறை
- மைதா மாவை சோடா, பேகிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும். ஒரு அகலக் கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு எண்ணெயைச் சேர்த்து விரல் நுனிகளால் எண்ணெய் மாவோடு நன்கு சேரும்வரை கலக்கவும். தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும்.
- எண்ணெய் தடவிய பலகை மேல் மாவைப் போட்டு அடித்து, மாவு நீளும் தன்மை பெறும்வரை நன்றாகப் பிசையவும். ஒரு கிண்ணத்தில் போட்டு ஈரத்துணி கொண்டு மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்.
- மசாலா செய்முறை: ஒரு அகல வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். அரைத்த விழுதையும், வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி குடமிளகாய், கேரட், கோஸ் சேர்த்து அனலை அதிகரித்து கைவிடாமல் கிளறவும்.
- வெங்காயத் தாள், சீன உப்பு, உப்பு சேர்த்து காய்கறி வதங்கும் வரை கலந்து கடைசியில் சாஸ் வகைகளைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
- ஸ்பிரிங் ரோல் செய்யும் முறை: ஒரு ரோல் செய்ய, கலந்த மைதா மாவிலிருந்து இரண்டு சிறிய உருண்டைகள் செய்ய வேண்டும் (சிறிய எலுமிச்சையளவு). மைதா மாவில் புரட்டி நீளவாக்கில் மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
- குழைத்த மாவு(1)ல் இருந்து சிறிதளவு முதல் சப்பாத்தி மேல் பூசி மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து லேசாக குழவியால் உருட்டவும்.
- ஒரு ஓரத்தில் நீளவாக்கில் மசாலாவை வைத்து சப்பாத்தியின் விளிம்பை சுற்றிலும் மைதா பேஸ்ட் 2-ஐ பூசவும். ஓரங்களை மத்தியில் வரும்படி மடித்து பாய்போல சுருட்டி ஒட்டவும்.
- செய்த ரோல் நீள சிலிண்டர் போல இருக்க வேண்டும். எல்லா மாவையும் இதே போல செய்து எண்ணெய் தடவிய குக்கர் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கவும்.
- இட்லிக்கு ஆவியில் அவிப்பதுபோல ஆனால் 2 நிமிடம் மட்டும் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும், சூடான எண்ணெயில் சுமாரான அனலில் வைத்து 3 அல்லது 4 ரோல்களை ஒவ்வொரு தடவைக்குமாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
- பரிமாறுவதற்கு முன் ரோல்களை வட்டவடிவமாக கூர்மையான கத்தியால் 3 அல்லது 4 பாகங்களாக வெட்டவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
- குறிப்பு: டின்னர் அல்லது பார்ட்டிகளுக்கு இந்த ஸ்பிரிங் ரோல் செய்வதானால் முதல் நாளே செய்து, ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு பாலிதீன் கவரில் வைத்து நன்றாக மூடி ப்ரிட்ஜின் ப்ரீசரில் வைக்கலாம். தேவைப்படும்போது 1/2 மணி நேரம் முன்பு எடுத்து எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறலாம்.