ஸ்பெஷல் தயிர் வடை (1)-இன் புகைப்படம், வெட்டி, உலர்பழ நிரப்புதல் தெரியும்

ஸ்பெஷல் தயிர் வடை (1)

சைவம்

தேங்காய், முந்திரி, பாதாமி, திராட்சை பூரணம் நிரப்பிய உளுந்து வடையை பொரித்து தயிரில் ஊற வைக்கப்படும் ஸ்பெஷல் தயிர் வடை.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • தயிர் வடை மாவு (தயிர் வடை செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • சிறிதளவு தேங்காய்த் துருவல்
  • முந்திரி (பொடியாக நறுக்கியது)
  • பாதாமி (பொடியாக நறுக்கியது)
  • கிஸ்மிஸ் திராட்சை
  • ட்யூட்டி ப்ரூட்டி துண்டுகள்
  • கெட்டியான தயிர் (ஊற வைக்க)

செய்முறை

  1. சிறிதளவு தேங்காயத் துருவல், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாமி, கிஸ்மிஸ் திராட்சை, ட்யூட்டி ப்ரூட்டி துண்டங்களை கலந்து கொள்ளவும்.
  2. வடை மாவை தட்டுவதற்கு முன் உருண்டை செய்யும்போது மத்தியில் குழி செய்து சிறிதளவு இந்த கலவையை மத்தியில் வைத்து மூடி பிறகு வடை தட்டி பொரிக்கவும்.
  3. முன்பு கூறியபடி தயிரில் ஊற வைத்து பரிமாறவும்.