ஸ்பெஷல் தயிர் வடை (2)-இன் புகைப்படம், தயிரில் ஊற வைத்து, கேரட் அலங்காரத்துடன்

ஸ்பெஷல் தயிர் வடை (2)

சைவம்

இஞ்சி, மிளகாய், தழைகள் நிரப்பி சமோசா வடிவில் மடித்த உளுந்து வடையை பொரித்து தயிரில் ஊற வைக்கப்படும் ஸ்பெஷல் தயிர் வடை.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • தயிர் வடை மாவு (தயிர் வடை செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • பச்சை மிளகாய் (விதை நீக்கி மிகப் பொடியாக அரிந்தது)
  • இஞ்சி (மெலிதாக நறுக்கியது)
  • கொத்தமல்லித் தழை (மெலிதாக நறுக்கியது)
  • பருப்பு வகைகள் (பொடியாக அரிந்தது)
  • கெட்டியான தயிர் (ஊற வைக்க)

செய்முறை

  1. பச்சை மிளகாயை மத்தியில் உள்ள விதையை எடுத்துவிட்டு மிகப் பொடியாக அரியவும். அதோடு மெலிதாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லித் தழை, பொடியாக அரிந்த பருப்பு வகைகளை கலந்து வைக்கவும்.
  2. வடை மாவை ஈரத்துணியின் மேல் தட்டியதும் மேலே சிறிதளவு இந்த கலவையைத் தூவவும். துணியின் முனையைத் தூக்கி அப்படியே வடையின் குறுக்கில் மடிக்கவும்.
  3. இப்போது மேலே தூவியவை உள்ளே மடங்கி வடை பாதி வட்டமாக சமோசா போன்ற வடிவத்தில் இருக்கும். இதை அப்படியே எடுத்து எண்ணெயில் பொரித்து தயிர் வடையாகப் போடவும். மேலே அலங்கரிக்க தயிர் வடை செய்முறையின் குறிப்பில் கூறியபடி தூவவும்.