சுறா மீன் புட்டின் புகைப்படம், மண் தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

சுறா மீன் புட்டு

அசைவம்

வேகவைத்து உதிர்த்த சுறா மீனை வெங்காயம், பச்சைமிளகாயுடன் வதக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்புட்டு

பொருட்கள்

  • 1/2 கிலோ பால் சுறா மீன்
  • 1/4 கிலோ சிறிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் (தாளிக்க)

செய்முறை

  1. மீனை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோல், எலும்பு நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். மிளகாயை இதில் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கியுள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.