சேமியா கேசரி
சேமியா கேசரி
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 500 கிராம் சேமியா
- 400 கிராம் சர்க்கரை
- 4 கப் தண்ணீர்
- 300 கிராம் நெய்
- 10 முந்திரி பருப்பு
- 4 ஏலக்காய்
- சிறிதளவு கேசரி பவுடர்
செய்முறை
- சேமியா, முந்திரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும். பிறகு ஏலப்பொடி சேர்க்கவும். பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பரிமாறவும்.