சீலா மீன் புட்டின் புகைப்படம், ஸ்டீல் தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

சீலா மீன் புட்டு

அசைவம்

இட்லிப்பானையில் வேகவைத்து உதிர்த்த சீலா மீனை வெங்காயம், கடுகு தாளிப்புடன் வதக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
30 நிமிடங்கள்
பேருக்கு
2
கடினத்தன்மை
எளிது
வகைகள்புட்டு

பொருட்கள்

  • 1/4 கிலோ சீலா மீன்
  • இஞ்சி (சிறிய துண்டு)
  • 10 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • சிறிது கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு

செய்முறை

  1. மீனை இட்லிப்பானையில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதங்கிய பின் மீனை இதில் சேர்த்து உப்பு கலந்து போட்டு நன்கு கிளறி இறக்கவும். விரும்பினால் முட்டை Scramble பண்ணிக் கலக்கலாம்.