
சாண்ட்விட்ச் ரோல்
சைவம்நீளவாக்கில் மெலிதாக அறுத்த ரொட்டி துண்டுகளை வெண்ணெய், புதினா-தக்காளி சட்னிகளுடன் அடுக்கி இறுக்கமாக சுருட்டி குளிர வைத்து வட்ட வடிவில் வெட்டப்படும் சாண்ட்விச் ரோல்.
- தயாரிப்பு நேரம்
- 50 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 8
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்
பொருட்கள்
- 1 முழு ரொட்டி (வெட்டப்படாதது)
- புதினா சட்னி, தக்காளி சட்னி (இந்தப் புத்தகத்தின் கடைசி பகுதியை பார்க்கவும்)
- 100 கிராம் வெண்ணெய்
- தக்காளி சாஸ் (தேவைக்கேற்ப)
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
செய்முறை
- வெட்டப்படாத முழு ரொட்டியை வாங்கி ஒரு பாலிதீன் கவரில் போட்டு நன்றாக மூடி ப்ரிஜ்ஜில் உள்ள ப்ரீசர் (Freezer) உள்ளே 1/2 மணி நேரம் வைக்கவும்.
- 1/2 மணி நேரம் கழித்து எடுத்து ஒரு கூரான கத்தியால் நீளவாக்கில் மெல்லிய நீளத் துண்டுகளாக்கவும் (Length wise slice).
- பிரட் துண்டங்களின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.
- முதல் ரொட்டித்துண்டை ஒரு சப்பாத்திக் கல்லின் மேல் வைத்து சப்பாத்திக் குழவியால் லேசாக உருட்டவும்.
- அதன்மேல் சிறிதளவு வெண்ணெயைத் தடவவும்.
- வெண்ணெய் தடவிய பாகத்தின் மேல் சிறிதளவு கெட்டியான புதினா சட்னியைத் தடவி அதன்மேல் இன்னொரு துண்டை வைத்து வெண்ணெய் தடவி, சிறிதளவு தக்காளி சட்னி தடவவும்.
- ஒரு மூலையிலிருந்து (அகலப் பாகத்தின் மூலை) பாய் உருட்டுவது போல இரண்டு துண்டுகளையும் ஒன்றாக, கெட்டியாகச் சுருட்டவும்.
- எல்லா துண்டுகளையும் இதே போல செய்தவுடன், ஒரு பாலீதீன் கவரில் போட்டு நன்றாக மூடி ப்ரீசரில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
- சிறிது கெட்டிப்பட்டவுடன் கூர்மையான கத்தியால் வட்ட வடிவமான துண்டுகளாக வெட்டி அழகாக பரிமாறலாம்.
- குறிப்பு: இதையே ரோல் போல செய்யாமல் ஒன்றன் மேல் ஒன்று வைத்து மூன்று கலர் சாண்ட்விட்ச்சாக பரிமாறலாம். பேக்கரி கடைகளில் ரொட்டியை வெட்டுவதற்கு முன்பு நாம் கேட்டால் நமது விருப்பப்படி இந்த மாதிரி நீளவாக்கில் வெட்டிக் கொடுப்பார்கள்.