சுட்டகறியின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

சுட்டகறி

அசைவம்

தட்டையாக அடித்த ஆட்டுத்தொடை இறைச்சியை மிளகு, வினிகர் கலவையில் தோய்த்து வறுக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 200 கிராம் தொடை கறி
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் வினிகர்
  • 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை

  1. ஆட்டின் முன் தொடைகறியை வாங்க சமஅளவுக்குள் துண்டுகள் வெட்டி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். உப்பு, மிளகுத்தூள், வினிகர், எண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும். கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்தி கட்டையால் தட்டி சதுரமாக பரத்தவும். கறித்துண்டுகளை எடுத்து மிளகு கலவையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். தோசைக் கல்லை காய வைத்து (எண்ணெயிட வேண்டியதில்லை) ஊறிய கறித்துண்டுகளை மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் பொன் வறுவலாக எடுக்கவும்.