ஜவ்வரிசி போண்டா-இன் புகைப்படம், பச்சை சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

ஜவ்வரிசி போண்டா

சைவம்

இரவு முழுவதும் தயிரில் ஊற வைத்த ஜவ்வரிசியை கடலைப்பருப்பு, வெங்காயத்துடன் கலந்து மென்மையான போண்டாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்பொண்டா வகைகள்

பொருட்கள்

  • 1 கப் ஜவ்வரிசி
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 கப் புளிப்பான கெட்டித் தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. ஜவ்வரிசியைக் கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.
  2. புளிப்புத் தயிரை லேசாகக் கடைந்து உப்பு சேர்த்து ஜவ்வரிசியில் கலந்து மூடி வைக்கவும்.
  3. 6 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
  4. கடலைப் பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும்.
  5. ஜவ்வரிசியில் ஊற வைத்த கடலைப் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து கலக்கவும். மோர் பற்றாவிடில் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். உருண்டை பிடிக்கும் அளவிற்கு மாவு பக்குவம் இருக்க வேண்டும்.
  6. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, ஜவ்வரிசிக் கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து எண்ணெய் கொள்ளுமளவிற்கு போடவும்.
  7. நன்றாகப் பொன்னிறமாக ஆனதும் திருப்பிப்போட்டு சிவந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். கொத்தமல்லி அல்லது வெங்காயத் தொக்குடன் பரிமாறவும். எண்ணெயை நன்கு வடியவிடவும்.
  8. ஜவ்வரிசியாதலால் போண்டா பொரியும் போது ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளும். வெந்த பிறகு கையால் பிரித்து விட்டு பரிமாறவும்.
  9. குறிப்பு: புளிப்பான கெட்டித் தயிரையே உபயோகப் படுத்தவும், தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஜவ்வரிசியின் அளவிற்குத் தகுந்தபடி தயிர் சேர்க்க வேண்டும் -- அளவில் பெரிய ஜவ்வரிசியாக இருந்தால் அதிகத் தயிர் பிடிக்கும். எண்ணெயில் பொரியும் போது அடிக்கடி கலக்க வேண்டாம், ஒரே தடவை திருப்பிப் போட்டு பொரிக்கவும்.