பீர்க்கங்காய் மெதுபக்கோடா-இன் புகைப்படம், சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

பீர்க்கங்காய் மெதுபக்கோடா

சைவம்

மிக நுணுக்கமாக நறுக்கிய பீர்க்கங்காயை மசாலா கடலைமாவு மாவில் கலந்து சிறிய மொறுமொறுப்பான பக்கோடாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 கப் கடலைமாவு
  • 2 (அ) 3 பீர்க்கங்காய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 சிட்டிகை சமையல் சோடா (அ) பேக்கிங் பவுடர்
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. பீர்க்கங்காயை தோல் சீவி, கசப்பு உள்ளதா என்று சாப்பிட்டுப் பார்த்து நல்ல காயாக தேர்ந்தெடுத்து பொடிப் பொடியாக நறுக்கவும்.
  2. சலித்த மாவோடு உப்பு, மிளகாய்த் தூள், மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து அரிந்த காயைச் சேர்க்கவும்.
  3. பொரிப்பதற்கு முன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜிமாவு போல கலக்கவும்.
  4. ஒரு சிறிய கரண்டியின் உதவியால் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சூடான எண்ணெயில் போட்டு சிறிய போண்டாக்கள் போல பொரித்தெடுக்கவும்.
  5. சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  6. மாற்று செய்முறை: (1) பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பீர்க்கங்காயுடன் சேர்த்து கலக்கலாம். (2) நறுக்கிய முந்திரிப் பருப்பு மற்றும் கீரைவகைகளைக் கலந்தும் இதேபோல பொரிக்கலாம்.