ரவா கேசரி

வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 200 கிராம் ரவை
  • 200 கிராம் சர்க்கரை
  • 150 கிராம் நெய்
  • சிறிதளவு கேசரிப்பவுடர்
  • 4 ஏலக்காய்
  • 10 முந்திரிப்பருப்பு

செய்முறை

  1. வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, ரவையை சிவக்க வறுக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையின் தரத்துக்கு தகுந்தபடி தண்ணீர் விட்டு கிளறவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை போடவும். நன்கு இளகி கெட்டிப்படத் துவங்கும். கேசரி அடிபிடிக்காமல் இருக்க விடாமல் கிளற வேண்டும். கேசரி நன்கு சேர்ந்து வந்ததும், மீதமுள்ள நெய் விட்டு, கேசரி பவுடர் போட்டு கிளறி இறக்கவும். பின்னர் ஏலப்பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்க்கவும்.