
அரிசிமாவு கோடிபேடலு
சைவம்தேங்காய், மசாலாவுடன் வேகவைத்த அரிசி மாவை பிசைந்து சிறிய வளையங்களாக்கி பொன்னிறமாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 2 கப் அரிசி மாவு (குவித்து; தயாரிப்பு முறை பெசலு கடியாலு செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது)
- 3 கப் தண்ணீர்
- 2 டீஸ்பூன் உப்பு
- எண்ணெய் (வேண்டிய அளவு)
- 1 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல்
- 1/2 டீஸ்பூன் மிளகு (கரகரப்பாகப் பொடி செய்யவும்)
- 1/2 டீஸ்பூன் சீரகம் (கரகரப்பாகப் பொடி செய்யவும்)
செய்முறை
- ஒரு அகலமான வெண்கலம் அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய், தேங்காய்த் துருவல் சேர்த்து சூடாக்கவும்.
- தண்ணீர் கொதி வரும்போது தீயை குறைத்து மாவை மத்தியில் கோபுரம் போல கொட்டி ஒரு கரண்டிக் காம்பால் குத்தி வைத்து அகலத் தட்டால் மூடவும்.
- 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கீழே இறக்கி வேகமாக கட்டி தட்டாதபடி கலக்கவும். அதோடு சீரகம், மிளகுத் தூள் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மாவை நன்கு பிசையவும்.
- தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசையவும். கைக்கு ஒட்டாதிருக்க சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பிசையவும்.
- எலுமிச்சையளவு உருண்டைகளாக்கி விரல்களைப் போல நீளமாக உருட்டவும் (எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லின் மேல் செய்யவும்). இரு முனைகளையும் ஒன்று சேர்த்து வட்ட வடிவ சங்கிலி போல செய்யவும். எல்லா உருண்டைகளையும் இதே போல செய்து கொள்ளவும்.
- சூடான எண்ணெயில் இளம்மஞ்சள் நிறத்தில் பொரித்து எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.