
இறால் மீன் குழம்பு
அசைவம்இறாலை வெங்காயம், தக்காளி மசாலாவில் வேகவைத்து தேங்காய்ப் பாலுடன் முடிக்கப்படும் குழம்பு.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்குழம்பு
பொருட்கள்
- 1/2 கிலோ இறால்
- 1/4 கப் தேங்காய் பால்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியாதூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் (தேவையானது)
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தக்காளி, மசாலா தூள்கள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் விட்டு வேக விடவும். பின்பு அதனுடன் வேகவைத்த இறாலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.