உருளைக்கிழங்கு பிரட் சாண்ட்விச்-இன் புகைப்படம், கெட்ச்அப்புடன் பரிமாறப்பட்டுள்ளது

உருளைக்கிழங்கு பிரட் சாண்ட்விச்

சைவம்

வறுத்த கடலைமாவுடன் கலந்த மசாலா உருளைக்கிழங்கு மசலாவை ரொட்டித் தூளில் பொதிந்து தோசைக்கல்லில் பொன்னிறமாக சுடப்படும் சாண்ட்விச்.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 6 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகுப்பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 8 துண்டுகள் ரொட்டி
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்
  • 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித்தூள்
  • 2 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • எண்ணெய் (சுடுவதற்கு)

செய்முறை

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து உதிரியாக்கவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாயை மிகப் பொடியாக அரியவும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. இதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து ஒரு வினாடி கலந்தபின் உருளைக்கிழங்கைச் சேர்த்து சில நிமிடங்கள் கலக்கவும்.
  5. கடைசியில் உப்பு சேர்த்து கீழே இறக்கி கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து ஆற விடவும்.
  6. கடலை மாவை சிறிது நெய் விட்டு வாணலியில் நல்ல வாசனை வரும்வரை சில நிமிடங்கள் குறைந்த தணலில் கலக்கவும்.
  7. இதை உருளைக்கிழங்கு கலவையோடு சேர்த்துக் கலந்துவிடவும்.
  8. வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டின் ஒரு பாகத்தில் இக் கலவையில் சிறிது பரப்பி நைசான பிரட் தூளை மேலே தூவி கைகளால் லேசாக அமுக்கி விடவும். ரொட்டியின் இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்கக் கல்லில் சுட்டு எடுக்கவும். தக்காளி சாஸ் / 'கெட்ச்அப்'புடன் பரிமாறவும்.