உருளைகிழங்கு ரோல்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

உருளைகிழங்கு ரோல்

சைவம்

மசாலா மசித்த உருளைக்கிழங்கு குழலை மெல்லிய ரவை-மைதா மாவு தகட்டில் சுருட்டி பொன்னிறமாக பொரிக்கப்படும் ரோல்.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்ரோல் வகைகள்

பொருட்கள்

  • 1 கப் மைதா (குவித்து)
  • 1/2 கப் மெல்லிய ரவை
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது
  • 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 3/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா (பசைக்கு)
  • 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் (பசைக்கு)

செய்முறை

  1. மைதா, ரவை, எண்ணெய், உப்பு ஒன்றாகக் கலந்து ஒரு அகலக் கிண்ணத்தில் வைக்கவும். தேவைப்பட்ட தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல கெட்டியாகப் பிசையவும். ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். இதோடு மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களைச் சேர்த்து கலந்து வைக்கவும் (வதக்க வேண்டாம்).
  3. இக் கலவையை எலுமிச்சையளவு உருண்டைகளாகச் செய்து பிறகு நீளவாக்கில் உருட்டவும் (நீள ஜாமூன் போல).
  4. பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய உருண்டைகள் செய்து சப்பாத்தி போல இடவும். இதில் ஒரு மூலையில் மசாலா உருட்டியதை வைத்து பாய் போல சுருட்டவும். குழல் போல சுருட்டியதும் ஓரங்களை உள்ளே மடித்து மைதா பசை கொண்டு ஒட்டவும். பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும் சரியாக ஒட்டவும்.
  5. இதே போல மாவு முழுவதையும் செய்துகொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மூன்று (அ) நான்கு துண்டங்களாக, கூரான கத்தி கொண்டு வெட்டி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.