உருளைக்கிழங்கு கபாப்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

உருளைக்கிழங்கு கபாப்

சைவம்

மசித்த உருளைக்கிழங்கு, நனைத்துப் பிழிந்த பிரட்டை மசாலா-தழைகளுடன் கலந்து குழல் வடிவில் பொன்னிறமாக பொரிக்கப்படும் கபாப்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்கபாப் வகைகள்

பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 7 துண்டுகள் ரொட்டி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா தழை
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 டீஸ்பூன் காய்ந்த மாங்காய்த்தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  2. ரொட்டித் துண்டங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி உடனே எடுத்து நன்றாகப் பிழிந்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
  3. மற்ற பொருட்களைச் சேர்த்துக் கலக்கவும். சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் உருட்டவும்.
  4. சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.