உருளைக்கிழங்கு கூடுகள்-இன் புகைப்படம், லெட்டுஸ் மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

உருளைக்கிழங்கு கூடுகள்

சைவம்

மசாலா பட்டாணி பூரணம் நிரப்பிய உருளைக்கிழங்கு உருண்டைகளை நொறுக்கிய சேமியாவில் புரட்டி மொறுமொறுப்பான கூடு போன்று பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/2 கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1/2 கப் வேகவைத்த பட்டாணி
  • 1 கப் உடைத்த சேமியா
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் அரைத்த கொத்தமல்லித் தழை விழுது
  • 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா (குழைத்துக் கொள்ளவும்)
  • 1 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு (குழைத்துக் கொள்ளவும்)
  • 1/4 கப் தண்ணீர் (குழைத்துக் கொள்ளவும்)

செய்முறை

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து கட்டியில்லாமல் மெத்தென்று மசிக்கவும்.
  2. இதோடு உப்பு, மிளகாய்த் தூள், பச்சை மிளகாய் விழுது, அரைத்த கொத்தமல்லி சேர்க்கவும்.
  3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டுச் சூடாக்கி பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  5. உருளைக்கிழங்கு கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் செய்யவும்.
  6. அதன் மத்தியில் குழி செய்து சிறிதளவு பட்டாணிக் கலவை வைத்து நன்றாக உருண்டை செய்யவும்.
  7. இதை மைதாமாவுக் கலவையில் முக்கி எடுத்து சேமியாவில் புரட்டி எடுக்கவும்.
  8. இதுபோல் எல்லா உருண்டைகளையும் செய்து 1/2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  9. சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
  10. பரிமாறுமுன் மத்தியில் இரண்டாக வெட்டி ஒரு தட்டில் அலங்காரமாக அடுக்கவும். சுற்றிலும் முட்டைக்கோஸ் இலை, கொத்தமல்லித் தழை அல்லது சாலட் இலை கொண்டு அலங்கரிக்கவும்.
  11. தக்காளி சாஸுடன் கூடாகப் பரிமாறவும்.