உருளை வறுவல்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

உருளை வறுவல்

சைவம்

வேகவைத்த உருளைக்கிழங்கு வட்டங்களை இஞ்சி-பூண்டு-மிளகாய் விழுதில் பூசி பொரிக்கப்படும் எளிய சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக் கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1/4 டீஸ்பூன் சோம்பு (அரைக்க)
  • 6 பல்லு பூண்டு (அரைக்க)
  • 1 அங்குலத் துண்டு இஞ்சி (அரைக்க)
  • 8 சிகப்பு மிளகாய் (அரைக்க)
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை (அரைக்க)
  • தேவைக்கேற்ப உப்பு (அரைக்க)

செய்முறை

  1. ஒரே அளவு உள்ளதாக பொறுக்கி உருளைக் கிழங்கை எடுத்துக் கொண்டு முழுதாக குக்கரில் வேக வைக்கவும். ஆறிய பிறகு தோலுரித்து 1/4 அங்குல வட்ட வடிவ துண்டங்களாக்கவும்.
  2. சோம்பு, பூண்டு, இஞ்சி, சிகப்பு மிளகாய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை சிறிதளவே தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதோடு மைதா மாவு, அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
  3. இந்த விழுதை உருளைக்கிழங்கு துண்டங்களின் இருபுறமும் மெலிதாகப் பூசி 1/2 மணி நேரம் வைக்கவும்.
  4. சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும். (இதையே தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டும் பரிமாறலாம்.)
  5. மாற்று செய்முறை: ஒரே அளவுள்ள கத்திரிக்காயை வட்ட வடிவத் துண்டங்களாக நறுக்கி குறிப்பிட்ட மசாலாவை பூசி பொரித்து பரிமாறவும்.