உருளைக் கிழங்கு சிப்ஸ்-இன் புகைப்படம், மிளகாய்த்தூள் தூவப்பட்டுள்ளது

உருளைக் கிழங்கு சிப்ஸ்

சைவம்

மெல்லிய வட்டங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கை டால்டாவில் பொன்னிறமாக பொரித்து மிளகாய்த்தூள், உப்பு தூவி காற்று புகாத பாத்திரத்தில் பதப்படுத்தப்படும் மொறுமொறுப்பான சிப்ஸ்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • ¼ கிலோ உருளைக்கிழங்கு
  • மிளகாய் தூள் (மூலப்பிரதி இதை '¾ கிலோ' என குறிப்பிடுகிறது, இது அச்சுப் பிழையாக இருக்கலாம் - தேவைக்கேற்ப தூவவும்)
  • 350 கிராம் டால்டா (பொரிக்க)
  • தேவைக்கேற்ற அளவு உப்பு

செய்முறை

  1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும். வட்ட வடிவமாக செதிக்கிக் கொள்ளவும். பின் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி வெள்ளைத் துணி மீது ஒவ்வொன்றாக பரப்ப வேண்டும். அப்போழுது உருளைக் கிழங்கில் உள்ள ஈரப்பசையை துணி உறிந்து விடும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து சூடேறிய பின் டால்டாவை ஊற்றி வட்ட வடிவமாக உள்ள உருளைக்கிழங்கை போட்டு பொன் நிறம் சிவந்தவுடன் அரிகரண்டியால் அரித்து ஒரு தட்டில் வைக்கவும்.
  3. மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கின் மீது தூவி, பின்னர் காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். திறந்து வைத்தால் மொறு மொறுப்பு இராது.
  4. மாலைப் பொழுதில் தீனியாகவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.