
உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட்
சைவம்மசித்த உருளைக்கிழங்கு-சீஸ் கலவையை வடையாகத் தட்டி மக்காச்சோள மாவு-ரொட்டித் தூளில் இருமுறை பூசி மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் கட்லெட்.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்
பொருட்கள்
- 1/4 கிலோ உருளைக்கிழங்கு
- 1/2 கப் துருவிய சீஸ் (பாலாடைக் கட்டி)
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- தேவைக்கேற்ப உப்பு
- 1/2 கப் காய்ந்த ரொட்டித் தூள்
- 1/4 கப் மக்காச்சோள மாவு
- எண்ணெய் (தேவையான அளவு)
செய்முறை
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சூடாக இருக்கும்போதே மசித்துக் கொள்ளவும்.
- அதோடு துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும்.
- கடைசியில் பாதி மக்காச்சோள மாவு, ரொட்டித் தூள் சேர்த்து பிசையவும். மாவிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து வடை போல தட்டவும்.
- மீதி இருக்கும் மக்காச்சோள மாவில் தண்ணீர் சேர்த்து கூழ் போல கலக்கவும். தட்டிய உருளைக்கிழங்கு கட்லெட்டை சோள மாவுக் கலவையில் முக்கி பிரட்தூளில் புரட்டி எடுக்கவும்.
- சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.