உருளைக்கிழங்கு கூடைகள்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

உருளைக்கிழங்கு கூடைகள்

சைவம்

துருவிய உருளைக்கிழங்கை வலைப் பட்டையச் சட்டியில் அழுத்தி மொறுமொறுப்பான உண்ணக்கூடிய கூடைகளாக பொரித்து சாலட் அல்லது சுண்டல் நிரப்ப தயார் செய்யப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு (அ) மைதா மாவு
  • தேவையான அளவு உப்பு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை ரசம்

செய்முறை

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய கண்ணுடைய ஸ்டீல் துருவியில் துருவிக் கொள்ளவும் (தண்ணீரில் போட வேண்டாம்).
  2. விரித்த துணியில் இரண்டு அடுக்காக மடித்து உருளைக்கிழங்கு துருவலைப் போட்டு நன்றாக சுற்றி அதிக ஈரத்தை ஒற்றி எடுத்துவிடவும்.
  3. இந்த துருவலில் சிறிது எலுமிச்சை ரசம், உப்பு, சோளமாவு சேர்த்து கலக்கவும்.
  4. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வலை போட்ட சிறிய வடிகட்டியின் உள்ளே சிறிது துருவலை பரவலாகப் பரப்பவும். அதற்குள்ளே சரியாகப் பொருந்தும்படி இன்னொரு கரண்டியை வைத்து சூடான எண்ணெயில் வைக்கவும்.
  5. சிறிது நேரம் கழித்து மேல்கரண்டியை எடுத்துவிட்டு ஒரு ஸ்பூன் உதவியால் சுற்றிலும் தளர்த்தி, உருளைக்கிழங்கு கூடையை நேரடியாக எண்ணெயில் போடவும். திருப்பிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
  6. இதே போல எல்லா துருவலையும் கூடைகளாகப் பொரிக்கவும் (சில நாட்கள் வரை டப்பியில் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்). இதற்குள்ளே காய்கறி சாலட் அல்லது சுண்டல் வைத்து பரிமாறலாம்.
  7. குறிப்பு: உப்பு சேர்க்காமல் பொரித்தால், பால் கோவா போன்ற ஏதாவது ஒரு இனிப்பை வைத்து பரிமாறலாம்.