பட்டாணி சுண்டல்

வகைகள்சுண்டல்

பொருட்கள்

  • 3 கப் காய்ந்த பட்டாணி
  • 2 டீஸ்பூன் கடுகு
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • 6 மிளகாய் வற்றல்
  • ¼ முடி தேங்காய்ப்பூ
  • தேவையானது உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  1. பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.