பட்டாணி தயிர் வடை-இன் புகைப்படம், வெட்டி, பட்டாணி நிரப்புதல் தெரியும்

பட்டாணி தயிர் வடை

சைவம்

மசாலா மசித்த பச்சைப் பட்டாணி பூரணம் நிரப்பிய உளுந்து வடையை பொரித்து தயிரில் ஊற வைக்கப்படும் பட்டாணி தயிர் வடை.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • தயிர் வடை மாவு (தயிர் வடை செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • உரித்த பச்சைப் பட்டாணி
  • பச்சைமிளகாய் விழுது
  • தேவைக்கேற்ப உப்பு
  • கரம்மசாலாத் தூள்
  • தனியாத் தூள்
  • துருவிய தேங்காய்
  • சிறிது எலுமிச்சை ரசம்
  • கெட்டியான தயிர் (ஊற வைக்க)

செய்முறை

  1. உரித்த பச்சைப் பட்டாணியைக் கழுவி மத்தினால் லேசாக மசிக்கவும் (மிக்ஸியிலும் ஒரு தடவை அடிக்கலாம்).
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி மசித்த பட்டாணியைப் போட்டு சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  3. இதோடு பச்சைமிளகாய் விழுது, உப்பு, கரம்மசாலாத் தூள், தனியாத் தூள், துருவிய தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும். சிறிது எலுமிச்சை ரசம் சேர்த்து கலக்கவும்.
  4. இக்கலவையை வடையின் மத்தியில் ஸ்டப் செய்து பொரிக்கவும். மற்ற தயிர் வடைகளைப் போல தயிரில் ஊறவைக்கவும்.