பீர்க்கங்காய் பொரிக்கறி
பீர்க்கங்காய் பொரிக்கறி
வகைகள்பொரியல்
பொருட்கள்
- ½ கிலோ பீர்க்கங்காய்
- 1 கரண்டி எண்ணெய்
- கடுகு
- உளுந்தம்பருப்பு
- வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- உப்பு
- மஞ்சள்
- 1 தேக்கரண்டி அரிசிப் பொரிமா
செய்முறை
- ½ கிலோ பீர்க்கங்காயைக் கழுவி தோலை மெல்லியதாகச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 1 கரண்டி எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி பின் காயைப் போட்டுத் தண்ணீரில் வேக விடவும். உப்பு, மஞ்சள் சேர்க்கவும். வெந்ததும் அரிசிப் பொரிமா 1 தேக்கரண்டி சேர்க்கவும்.