பாலாடைக்கட்டி சாண்ட்விச்-இன் புகைப்படம், கெட்ச்அப்புடன் பரிமாறப்பட்டுள்ளது

பாலாடைக்கட்டி சாண்ட்விச்

சைவம்

பச்சை பனீரை முளைக்கட்டிய பாசிப்பயறு, மசாலா சாஸ்களுடன் கலந்து ரொட்டிக்குள் வைத்து சுடப்படும் பாலாடைக்கட்டி சாண்ட்விச்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
10 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 16 துண்டுகள் ரொட்டி
  • 1 லிட்டர் பனீர் (பாலிலிருந்து தயாரித்தது)
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா
  • 1/2 கப் முளைகட்டிய பாசிப்பயறு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 2 டீஸ்பூன் வோர்செஸ்டர்ஷயர் சாஸ்
  • 1/4 டீஸ்பூன் மிளகுப்பொடி
  • எண்ணெய் (அ) வெண்ணெய் (ரொட்டியின் மீது தடவ)

செய்முறை

  1. பாலாடைக்கட்டியை (பனீர்) நன்றாக உதிர்த்துவிட்டு அதோடு மைதா, முளைப்பயறு, சாஸ் வகைகள், பொடி வகைகள் சேர்த்து கலக்கவும்.
  2. ரொட்டித் துண்டுகளின மேல் வெண்ணெய் தடவவும்.
  3. பாலாடைக்கட்டி கலவையை இரண்டு ரொட்டித் துண்டுகள் மத்தியில் வைத்து சாண்ட்விட்ச் டோஸ்டரில் வைத்து சுடவும்.
  4. குறிப்பு: இதே கலவையை ஒரு ஸ்லைஸ் மீது சிறிது வைத்து மேலே மெலிதாக சீவப்பட்ட குடமிளகாய் வைத்து துருவிய சீஸ் தூவி ஓவனில் வைத்து (Grill) பேக் செய்யலாம்.