பானி பூரி-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பானி பூரி

சைவம்

மொறுமொறுப்பான ரவை-மைதா பூரிகளுக்குள் மசாலா உருளைக்கிழங்கு, பாசிப்பயறு, இனிப்பு சட்னி, புளிப்பு புதினா நீர் நிரப்பி ஒரே கவளத்தில் சாப்பிடும் தெருவோர சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
60 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • 3/4 கப் மெல்லிய ரவை
  • 1/2 கப் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவு
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 2 சிட்டிகை பேக்கிங் பவுடர்
  • ஐஸ் தண்ணீர் (அ) குடிக்கும் சோடா (மாவை பிசைவதற்கு)
  • எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)
  • 1 கப் முற்றிய புதினா இலை (நன்கு)
  • 1/3 கப் கொத்தமல்லித் தழை
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு (தலை தட்டி)
  • 4 பச்சை மிளகாய்
  • புளி (கோழியளவு, நீரில் ஊற வைக்கவும்)
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் துருவிய வெல்லம்
  • 1 டீஸ்பூன் கருப்பு உப்பு (கடைகளில் கட்டியாகக் கிடைக்கும்; வாங்கி பொடித்துக் கொள்ளவும்)
  • புளி (பெரிய எலுமிச்சை அளவு)
  • 1/4 கப் துருவிய வெல்லம் (இனிப்பு சட்னிக்கு)
  • 5 பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது)
  • 1 டீஸ்பூன் உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)
  • 1 டீஸ்பூன் உப்பு (இனிப்பு சட்னிக்கு)
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் (இனிப்பு சட்னிக்கு)
  • உருளைக்கிழங்கு (வேகவைத்து சிறு துண்டுகளாக்கியது, பரிமாறுவதற்கு)
  • முழு பாசிப்பயறு (வேகவைத்தது, பரிமாறுவதற்கு)

செய்முறை

  1. உளுந்தை வாணலியில் இளஞ் சிவப்பாக வறுக்கவும். மிக்ஸியில் பொடி செய்து சலித்துக் கொள்ளவும். இதை மைதா, ரவை, உப்பு, பேகிங் பவுடரோடு சேர்த்து கலந்து ஒரு பேசினில் எடுத்துக் கொள்ளவும். சோடா பாட்டில் மூடியைத் திறந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவு போல பிசையவும். ஈரத்துணி கொண்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். நன்றாக அடித்துப் பிசைந்து மாவு எலாஸ்டிக் தன்மை பெறும்படி செய்யவும்.
  2. சிறுசிறு கோலி போன்ற உருண்டைகளாக்கி சிறிய பூரிகளாக இடவும். பூரி இட இட ஆறாமல் உடனே எண்ணெயில் பொரிக்கவும். குறைந்த அனலில் சிறிது நேரம் பொரித்து எடுத்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும். (மிக மெல்லியதாகவும் இல்லாமல் மிகக் கனமாகவும் இல்லாமல் பூரி இடவும். அப்போதுதான் பூரி பொங்கி வரும்.)
  3. புதினா சட்னி: புதினா இலை, கொத்தமல்லித் தழை, உப்பு, பச்சை மிளகாய், ஊற வைத்த புளி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதோடு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். சிறிது காய்ந்த மாங்காய்த் தூள் சேர்த்துக் கலந்து, ஒரு எலுமிச்சம் பழத்தின் ரசத்தை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து துருவிய வெல்லம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பெரிய கண் வலை உள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
  4. இனிப்பு சட்னி: புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். அதிலேயே திராட்சை, அரிந்த பேரீச்சம் பழம் சேர்த்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து துருவிய வெல்லம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பெரிய கண் வலை உள்ள வடிகட்டியில் வடி கட்டவும். சட்னி சிறிது கெட்டிப்படும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  5. பரிமாறும் முறை: உருளைக்கிழங்கையும், முழு பாசிப் பயறையும் வேக வைத்துக் கொள்ளவும். கிழங்கை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கவும், உப்பு, மிளகாய்த் தூள் தூவவும். வேக வைத்த பயறை வடிகட்டி தண்ணீர் வடிந்தும் உப்பு, மிளகாய்த்தூள் தெளித்து தனியாக வைக்கவும். ஒரு பூரியை எடுத்து மேல்பகுதியில் மத்தியில் சிறிய ஓட்டை செய்யவும், அதற்குள் சிறிது பயறு, உருளைக் கிழங்கு துண்டுகள் போடவும். ஒரு டீஸ்பூன் இனிப்பு சட்னி போட்டு, பானி (நீர்க்கக் கரைத்த புதினா சட்னி) ஊற்றி உடனே சாப்பிடவும்.